Monday, September 27, 2010

"வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களுக்கு அக்குபஞ்சர் சிறந்த தீர்வு' தினமணி 27/09/2010

சென்னை, செப். 25: வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களுக்கு அக்குபஞ்சர் மருத்துவமுறை சிறந்த தீர்வாகும் என்று லண்டனைச் சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர் ஜெராட் கைட்ஸ் தெரிவித்தார்.  அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ஜெராட் கைட்ஸ் பேசியது:  அக்குபஞ்சர் மருத்துவம் சீன நாட்டில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் தேவை உயிர் வாழ்வதுதான். ஒரு நோய் வராமல் தற்காத்துக் கொள்வதுதான் முக்கிய மருத்துவ சேவையாகவும், தேவையாகவும் இருந்தது. ஆனால் இன்று பல்வேறு தேவைகள், மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றங்களினால் உடல் வலி, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு, தலைவலி என பலவிதமான பிரச்னைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறான். இத்தகைய பிரச்னைகளுக்கு அக்குஞ்சர் சிறந்த தீர்வாகும். அடிப்படையில் ஊசியினைக் கொண்டு உடலில் உள்ள பல்வேறு புள்ளிகளில் செலுத்துவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது. அக்குபஞ்சர் மருத்துவமானது, மனிதனிடம் உள்ள அறிகுறிகளை வைத்து தீர்வு காணாமல், அந்த நோயாளியின் நிலை, சுற்றுச்சூழல், மனநிலை ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதன் மூலம் மனிதனுக்குள் உள்ள சக்தி தூண்டப்பட்டு, அதன் அளவு அதிகரிக்கிறது. குறிப்பிட்ட சில மருத்துவங்கள் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமே குணமளிக்கும். அக்குபஞ்சர் மருத்துவத்தைப் பொறுத்தவரை, உலகின் அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களையும் குணப்படுத்தலாம்.

Saturday, September 25, 2010

அக்குபஞ்சரில் அனைத்துவிதமான வலி நிவாரணம்

  அக்குபஞ்சரில் வலி நிவாரணம் அதிகம் உண்டு. முதுகு வலி, முழங்கால் வலி,இடுப்பு வலி என அனைத்து விதமான வலிகளை குணப்படுத்தமுடியும்.






 சிகிச்சை ஆரம்பித்த பதினைந்து நாட்களில் குணம் தெரிய ஆரம்பிக்கும். 

Saturday, September 18, 2010

நீரிழிவு நோய்களுக்கு சிறந்த முறையில் அக்குபங்க்சர்

     நீரிழிவு நோய்களுக்கு சிறந்த முறையில் அக்குபங்க்சர் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதிகமாக சிறுநீர் வெளியேறுதல்,  தொண்டை காய்ந்துபோதல், திடீரென பசிஎடுத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். 





Scientific studies and clinical tests in international research centers in the past 10 years* have shown that acupuncture can help diabetic patients in the following ways:
  • lower blood glucose content;
  • lower the release of pancreatic glucagons;
  • attenuate symptoms of polyphagia (the urge to eat too much), polydipsia (excessive thirst) and polyuria (excessive passage of urine);
  • prevent slowing of motor nerve conduction;
  • improve microcirculation and myocardial contractility;
  • enhance blood outflow and regulate vascular peripheral resistance;
  • exert antiatherogenic, antioxidant and immunomodulating effects;
  • obliterate antheroscelerosis of the legs;
  • induce secretion of endogenous beta-endorphin;
  • elevate a lowered pain threshold; and
  • increase cell proliferation and neuropeptide Y levels.