Monday, September 27, 2010

"வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களுக்கு அக்குபஞ்சர் சிறந்த தீர்வு' தினமணி 27/09/2010

சென்னை, செப். 25: வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களுக்கு அக்குபஞ்சர் மருத்துவமுறை சிறந்த தீர்வாகும் என்று லண்டனைச் சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர் ஜெராட் கைட்ஸ் தெரிவித்தார்.  அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ஜெராட் கைட்ஸ் பேசியது:  அக்குபஞ்சர் மருத்துவம் சீன நாட்டில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் தேவை உயிர் வாழ்வதுதான். ஒரு நோய் வராமல் தற்காத்துக் கொள்வதுதான் முக்கிய மருத்துவ சேவையாகவும், தேவையாகவும் இருந்தது. ஆனால் இன்று பல்வேறு தேவைகள், மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றங்களினால் உடல் வலி, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு, தலைவலி என பலவிதமான பிரச்னைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறான். இத்தகைய பிரச்னைகளுக்கு அக்குஞ்சர் சிறந்த தீர்வாகும். அடிப்படையில் ஊசியினைக் கொண்டு உடலில் உள்ள பல்வேறு புள்ளிகளில் செலுத்துவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது. அக்குபஞ்சர் மருத்துவமானது, மனிதனிடம் உள்ள அறிகுறிகளை வைத்து தீர்வு காணாமல், அந்த நோயாளியின் நிலை, சுற்றுச்சூழல், மனநிலை ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதன் மூலம் மனிதனுக்குள் உள்ள சக்தி தூண்டப்பட்டு, அதன் அளவு அதிகரிக்கிறது. குறிப்பிட்ட சில மருத்துவங்கள் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமே குணமளிக்கும். அக்குபஞ்சர் மருத்துவத்தைப் பொறுத்தவரை, உலகின் அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களையும் குணப்படுத்தலாம்.

Saturday, September 25, 2010

அக்குபஞ்சரில் அனைத்துவிதமான வலி நிவாரணம்

  அக்குபஞ்சரில் வலி நிவாரணம் அதிகம் உண்டு. முதுகு வலி, முழங்கால் வலி,இடுப்பு வலி என அனைத்து விதமான வலிகளை குணப்படுத்தமுடியும்.






 சிகிச்சை ஆரம்பித்த பதினைந்து நாட்களில் குணம் தெரிய ஆரம்பிக்கும். 

Saturday, September 18, 2010

நீரிழிவு நோய்களுக்கு சிறந்த முறையில் அக்குபங்க்சர்

     நீரிழிவு நோய்களுக்கு சிறந்த முறையில் அக்குபங்க்சர் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதிகமாக சிறுநீர் வெளியேறுதல்,  தொண்டை காய்ந்துபோதல், திடீரென பசிஎடுத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். 





Scientific studies and clinical tests in international research centers in the past 10 years* have shown that acupuncture can help diabetic patients in the following ways:
  • lower blood glucose content;
  • lower the release of pancreatic glucagons;
  • attenuate symptoms of polyphagia (the urge to eat too much), polydipsia (excessive thirst) and polyuria (excessive passage of urine);
  • prevent slowing of motor nerve conduction;
  • improve microcirculation and myocardial contractility;
  • enhance blood outflow and regulate vascular peripheral resistance;
  • exert antiatherogenic, antioxidant and immunomodulating effects;
  • obliterate antheroscelerosis of the legs;
  • induce secretion of endogenous beta-endorphin;
  • elevate a lowered pain threshold; and
  • increase cell proliferation and neuropeptide Y levels.



Sunday, October 18, 2009

அக்குபங்க்சர் எனும் மருந்தில்லா மருத்துவம்




மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்








வளிமுதலா எண்ணிய மூன்று.
  வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
Acupuncture's
"effective rate in the treatment of chronic pain is comparable with that of morphine."

-World Health Organization,
2002,
Acupuncture: Review and Analysis of Reports on Controlled Clinical Trials




                சீன அக்குபங்க்சர் எனும்   மருந்தில்லா மருத்துவம்.


     
அக்குபங்க்சர் மருத்துவம்  பக்க விளைவுகள் இல்லாதது.





     அக்குபங்க்சர் என்பது மயிரிழையை காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல்கள் மூலம் தோலின் மேல் பகுதியில் தொடுவது மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை களையக் கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை 5000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 


     நம்மை விட பல மருத்துவ முன்னேற்றங்களை கண்டுள்ள மேலைநாட்டினர் அக்குபங்க்சர் போன்ற பாரம்பரிய கலைகளை அவற்றின் பக்கவிளைவுகளற்ற, விரைவில் நிவாரணம் அளிக்கும் தன்மையை அறிந்து அவற்றின் மூலம் தங்களின்  நோய்களுக்கு சிகிச்சை பெற மாற்றுமுறை மருத்துவர்களை நாடிச்செல்கின்றனர்.இதை நான் கூறுவதால் ஆங்கில மருத்துவ முறைக்கு எதிரி என நினைக்க வேண்டாம். அவசர கால நோய் நிலைகளுக்கு ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தை வேறு மாற்று முறை மருத்துவங்கள் பெற முடியவில்லை என்பது உண்மை.


      1962 ம் ஆண்டில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அல்மா அட்டாவில் உலக சுகாதார நிறுவனத்தால் நடைபெற்ற மருத்துவ வல்லுனர்களின் கூட்டத்தில் மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் உள்ள நல்லவற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும், அதன் மூலம் "2000 ம் வருடத்தில் எல்லோருக்கும் நலவாழ்வு" என்ற குறிக்கோளை அடைய தீர்மானம் போட்டனர். அன்று நடந்த மருத்துவ வல்லுனர்களின் கூட்டத்தில் ஏறக்குறைய 96 வகை நோய்களுக்கு அக்குபங்க்சர் மூலம் முதல்நிலை சிகிச்சை அளிக்கலாம் என்று பரிந்துரைக்கபட்டது. 


     அக்குபங்க்சர் சீனாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டுவரும் அறிவியல் முறையாகும். மனிதனின் ஆரோகியத்தை மேம்படுத்தவும் நோய் வராமல் தடுக்க கூடிய முறைகளையும் ஒருவேளை
நோய் ஏற்பட்டால் அவற்றிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய விதிமுறைகளையும் நமக்கு எடுத்துறைக்கும் மேன்மையான அறிவியல் கலையாகும். 


     அக்குபங்க்சர் ஒரு அறிவியல் மருத்துவமில்லை என்று வாதாடுகின்ற இன்றைய  நவீன அறிவியல் மருத்துவங்கள் அக்குபங்க்சர் மருத்துவ முறையின் மூலமாக, எளிய, பின்விளைவுகளற்ற. பாதுகாப்பான, செயல்திறன் மிகுந்த அதே நேரத்தில் மிகவும் சிக்கனமான முறையில் சிகிச்சை அளித்து அந்த நோய்களிலிருந்து நிவாரணம் கொடுக்கமுடியும் என்பதை மறுக்கமுடியாது. 


    ஓர் உயர்ந்த மருத்துவன் நோய் வருமுன் அதை குணப்படுதுகிறான் ஆனால் ஒரு தரம் குறைந்த மருத்துவன் நோய்கண்ட பிறகு அதற்கு சிகிச்சை அளிக்கிறான் என்பது சீன பழமொழி.


     அக்குபங்க்சர் நாடி பரிசோதனை மூலம் சக்தி ஓட்ட குறைபாட்டின் மையத்தை அறிந்து , அதனை சரி செய்யக்கூடிய அக்குபங்க்சர் புள்ளியினை தொடுவதன் மூலம் நோய் களையப்படுகிறது.


     சிலருக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே குணம் தெரிய ஆரம்பிக்கும்.சிலருக்கு நான்கு ஐந்து முறை செய்த பிறகு திடீரென மாறுதல் தெரிய ஆரம்பிக்கும்.


     அக்குபங்க்சர் நாடி பரிசோதனையின் சிறப்பு அம்சமே , நோயாளி கூறும் தொந்தரவுகள் - கூறாத தொந்தரவுகள் அனைத்துமே ஒரே நோயின் அறிகுறிதான். ஒரு நோயாளிக்கு பல குறைகள் உள்ளன. அவர் அனைத்து குறைகளையும் சொல்ல மறந்துவிடுகிறார் . சில குறைகளை மட்டும் கூறுகிறார். நாங்கள் அவர்களின் உடலின் அனைத்து குறைகளையும் பார்த்து நோயாளி கூறாமலே நாங்கள் கண்டறிகின்றோம்.


      அக்குபங்க்சர் வைத்தியத்தில் கண்கள் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தலைவலி, சிறுநீரக கோளாறுகள், சளி, சைனஸ், நுரைஈரல் சம்பந்தமான நோய்கள், மூட்டு வலி, ஆண்மை குறைவு, மாதவிடாய் கோளாறுகள் இன்னும் பல வியாதிகள் அக்குபங்க்சர் மூலம் குணப்படுத்த முடியும்.


    மேலும் முகத்தில் அதிகமாக சுருக்கங்கள் விழுவது, முடி கொட்டுவது, தோல் நோய்கள், கன்னங்கள் ஒட்டிப்போய் இருத்தல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களையும் குணப்படுத்த முடியும்.


     அக்குபங்க்சர் மூலம் கீழ்க்கண்ட நோய்களையும் குணப்படுத்த முடியும்.
ஒற்றைத்தலைவலி, தேமல், சொரியாசிஸ், கருதங்காமை, மாதவிடாய் தள்ளிபோதல், குறைவான விந்தணுக்கள், மூலம் , பித்தப்பை கல், சிறுநீரக கல், நீரிழிவு நோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்த முடியும்.

     தூக்கம்மின்மைக்கு அக்குபங்க்சர் மூலம் விரைவாக குணப்படுத்த முடியும். இருதய சக்தி ஓட்ட பாதையில் உள்ள புள்ளிகளை தூண்டுவதன் மூலம் மனம் அமைதி பெற்று தூக்கம் நன்றாக வரும். கனவுகள் இல்லாமல் அமைதியான முறையில் உறக்கம் வரும். படபடப்பு குறையும், தேவை இல்லாத சிந்தனைகள் குறையும். 




Acupuncture for the Treatment of Pain


Although acupuncture has been used for thousands of years to treat a wide variety of painful conditions, only recently has it become scientifically recognized as an effective pain therapy. In fact, according to the World Health Organization (WHO), acupuncture is as effective as morphine in treating chronic pain. Acupuncture treatment and related modalities have been shown clinically to trigger the central nervous system to release pain-relieving chemicals, such as endorphins (derived from the termsendogenous and morphine). Some types of natural endorphins are over 500 times stronger than morphine!