மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் |
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். |
"effective rate in the treatment of chronic pain is comparable with that of morphine."
-World Health Organization,
2002,Acupuncture: Review and Analysis of Reports on Controlled Clinical Trials
சீன அக்குபங்க்சர் எனும் மருந்தில்லா மருத்துவம்.
அக்குபங்க்சர் மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாதது.
அக்குபங்க்சர் என்பது மயிரிழையை காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல்கள் மூலம் தோலின் மேல் பகுதியில் தொடுவது மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை களையக் கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை 5000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நம்மை விட பல மருத்துவ முன்னேற்றங்களை கண்டுள்ள மேலைநாட்டினர் அக்குபங்க்சர் போன்ற பாரம்பரிய கலைகளை அவற்றின் பக்கவிளைவுகளற்ற, விரைவில் நிவாரணம் அளிக்கும் தன்மையை அறிந்து அவற்றின் மூலம் தங்களின் நோய்களுக்கு சிகிச்சை பெற மாற்றுமுறை மருத்துவர்களை நாடிச்செல்கின்றனர்.இதை நான் கூறுவதால் ஆங்கில மருத்துவ முறைக்கு எதிரி என நினைக்க வேண்டாம். அவசர கால நோய் நிலைகளுக்கு ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தை வேறு மாற்று முறை மருத்துவங்கள் பெற முடியவில்லை என்பது உண்மை.
1962 ம் ஆண்டில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அல்மா அட்டாவில் உலக சுகாதார நிறுவனத்தால் நடைபெற்ற மருத்துவ வல்லுனர்களின் கூட்டத்தில் மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் உள்ள நல்லவற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும், அதன் மூலம் "2000 ம் வருடத்தில் எல்லோருக்கும் நலவாழ்வு" என்ற குறிக்கோளை அடைய தீர்மானம் போட்டனர். அன்று நடந்த மருத்துவ வல்லுனர்களின் கூட்டத்தில் ஏறக்குறைய 96 வகை நோய்களுக்கு அக்குபங்க்சர் மூலம் முதல்நிலை சிகிச்சை அளிக்கலாம் என்று பரிந்துரைக்கபட்டது.
அக்குபங்க்சர் சீனாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டுவரும் அறிவியல் முறையாகும். மனிதனின் ஆரோகியத்தை மேம்படுத்தவும் நோய் வராமல் தடுக்க கூடிய முறைகளையும் ஒருவேளை
நோய் ஏற்பட்டால் அவற்றிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய விதிமுறைகளையும் நமக்கு எடுத்துறைக்கும் மேன்மையான அறிவியல் கலையாகும்.
அக்குபங்க்சர் ஒரு அறிவியல் மருத்துவமில்லை என்று வாதாடுகின்ற இன்றைய நவீன அறிவியல் மருத்துவங்கள் அக்குபங்க்சர் மருத்துவ முறையின் மூலமாக, எளிய, பின்விளைவுகளற்ற. பாதுகாப்பான, செயல்திறன் மிகுந்த அதே நேரத்தில் மிகவும் சிக்கனமான முறையில் சிகிச்சை அளித்து அந்த நோய்களிலிருந்து நிவாரணம் கொடுக்கமுடியும் என்பதை மறுக்கமுடியாது.
ஓர் உயர்ந்த மருத்துவன் நோய் வருமுன் அதை குணப்படுதுகிறான் ஆனால் ஒரு தரம் குறைந்த மருத்துவன் நோய்கண்ட பிறகு அதற்கு சிகிச்சை அளிக்கிறான் என்பது சீன பழமொழி.
அக்குபங்க்சர் நாடி பரிசோதனை மூலம் சக்தி ஓட்ட குறைபாட்டின் மையத்தை அறிந்து , அதனை சரி செய்யக்கூடிய அக்குபங்க்சர் புள்ளியினை தொடுவதன் மூலம் நோய் களையப்படுகிறது.
சிலருக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே குணம் தெரிய ஆரம்பிக்கும்.சிலருக்கு நான்கு ஐந்து முறை செய்த பிறகு திடீரென மாறுதல் தெரிய ஆரம்பிக்கும்.
அக்குபங்க்சர் நாடி பரிசோதனையின் சிறப்பு அம்சமே , நோயாளி கூறும் தொந்தரவுகள் - கூறாத தொந்தரவுகள் அனைத்துமே ஒரே நோயின் அறிகுறிதான். ஒரு நோயாளிக்கு பல குறைகள் உள்ளன. அவர் அனைத்து குறைகளையும் சொல்ல மறந்துவிடுகிறார் . சில குறைகளை மட்டும் கூறுகிறார். நாங்கள் அவர்களின் உடலின் அனைத்து குறைகளையும் பார்த்து நோயாளி கூறாமலே நாங்கள் கண்டறிகின்றோம்.
அக்குபங்க்சர் வைத்தியத்தில் கண்கள் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தலைவலி, சிறுநீரக கோளாறுகள், சளி, சைனஸ், நுரைஈரல் சம்பந்தமான நோய்கள், மூட்டு வலி, ஆண்மை குறைவு, மாதவிடாய் கோளாறுகள் இன்னும் பல வியாதிகள் அக்குபங்க்சர் மூலம் குணப்படுத்த முடியும்.
மேலும் முகத்தில் அதிகமாக சுருக்கங்கள் விழுவது, முடி கொட்டுவது, தோல் நோய்கள், கன்னங்கள் ஒட்டிப்போய் இருத்தல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களையும் குணப்படுத்த முடியும்.
அக்குபங்க்சர் மூலம் கீழ்க்கண்ட நோய்களையும் குணப்படுத்த முடியும்.
ஒற்றைத்தலைவலி, தேமல், சொரியாசிஸ், கருதங்காமை, மாதவிடாய் தள்ளிபோதல், குறைவான விந்தணுக்கள், மூலம் , பித்தப்பை கல், சிறுநீரக கல், நீரிழிவு நோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்த முடியும்.
தூக்கம்மின்மைக்கு அக்குபங்க்சர் மூலம் விரைவாக குணப்படுத்த முடியும். இருதய சக்தி ஓட்ட பாதையில் உள்ள புள்ளிகளை தூண்டுவதன் மூலம் மனம் அமைதி பெற்று தூக்கம் நன்றாக வரும். கனவுகள் இல்லாமல் அமைதியான முறையில் உறக்கம் வரும். படபடப்பு குறையும், தேவை இல்லாத சிந்தனைகள் குறையும்.
Acupuncture for the Treatment of Pain
Although acupuncture has been used for thousands of years to treat a wide variety of painful conditions, only recently has it become scientifically recognized as an effective pain therapy. In fact, according to the World Health Organization (WHO), acupuncture is as effective as morphine in treating chronic pain. Acupuncture treatment and related modalities have been shown clinically to trigger the central nervous system to release pain-relieving chemicals, such as endorphins (derived from the termsendogenous and morphine). Some types of natural endorphins are over 500 times stronger than morphine!
2 comments:
உபயோகமான செய்திகள்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment